நன்றி பலி, நன்றி பலி
நன்றி பலி, நன்றி பலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை ஆனந்தமே – என்
அப்பா உம் திருப்பாதமே
- நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா – அது
நிரந்தரமானதையா
கோடி கோடி நன்றி டாடி (3)
- இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே – இன்று
உறவாடி மகிழ்ந்திடுவேன்.. (கோடி ..கோடி) - ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா.. (கோடி ..கோடி) - வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு.. (கோடி ..கோடி) - ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா.. (கோடி ..கோடி) - என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே.. (கோடி ..கோடி) - புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே
ஆறுதல் நாயகனே.. (கோடி ..கோடி)