Ninaithu paarkiren..நினைத்து பார்க்கிறேன்

நினைத்து பார்க்கிறேன்

Pr.BENNY JOSHUA

நினைத்துப் பார்க்கிறேன்
கடந்து வந்த பாதைகளை
தியானிக்குறேன்
உம் தயவை

திரும்பிப் பார்க்கிறேன்
துவங்கின காலங்களை
புரிந்து கொள்கிறேன்
உம் அன்பை

துவங்கினேன்
ஒன்றும் இல்லாமல்
திருப்தியாய்
என்னை நிறைத்தீர் (2)

நீர் உண்மை உள்ளவர்
நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல்
நடத்தி செல்பவர் (2)

  1. தரிசனம் ஒன்றுதான்
    அன்று சொந்தமே
    கையில் ஒன்றும் இல்லை
    அன்று என்னிடமே (2)

தரிசனம் தந்தவர்
என்னை நடத்தினீர்
தலைகுனியாமல்
என்னை உயர்த்தினீர் (2)

நீர் உண்மை உள்ளவர்…..

  1. ஏங்கிப் பார்த்த நன்மைகள்
    இன்று என்னிடமே
    நிரம்பி வலியும் ஆசீர்
    எனக்கு தந்தீரே (2)

குறைவிலும் உண்மையாய்
என்னை நடத்தினீர்
உம் கிருபை அளவில்லாமல்
பொழிந்திட்டீர் (2)

நீர் உண்மை உள்ளவர்…….

இதுவரை தாங்கின கிருபை
இனிமேலும் தாங்கிடுமே
இதுவரை சுமந்த கிருபை
இனிமேலும் சுமந்திடுமே (4)

நீர் உண்மை உள்ளவர்………