Paavathin baarathinaal – பாவத்தின் பாரத்தினால்

Bro: Paul Aseer Lawrie

பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் ஏசு நாதா – (2 )

கெட்ட குமாரனைப் போல்
துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே – (2 )

கள்ளனாயினும் நான்
நீர் பெற்ற பிள்ளை அல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீ தள்ளாதே சிலுவை நாதா – (2 )

பாவி மரியாளையும் நன்றியற்ற
பேதுருவையும்
அருள் செய்த ஆண்டவனே கிருபைகூர் என்ஐயனே – (2 )

உம்மோடு வருடங்களாய் உணவுண்ட
யூதாசை போல்
கறை அற்ற தந்தை உம்மை வஞ்சித்தேன் யேசுநாதா – (2 )

தந்தையை விட்ட பின்பு
தவிடு தான் ஆகாரமோ
மனம் கசிந்து நொந்தேன் கண்ணீரை துடைத்திடுமே – (2 )

அறையுண்ட சிலுவை இன்று
அணைத்திட வாரும் ஐயா
நின் பாதம் வீழ்ந்தேனையா சமாதானம் தாருமையா – (2 )

தந்தை தாய் தாமரெல்லாம்
என்னைக் கைவிடுவார்கள்
சாகும் நாளில் தாங்குவார் நீர் அல்லால் யாருமில்லை – (2 )