Parisutham pera vandhiteergala

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லா திரு இரத்தத்தினால் ?
பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் ?

மாசில்லா -சுத்தமா
திரு புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறா?
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால்?

மணவாளன் வரக்களிப்பீர்களா
தூய நதியின் ஷ்நானத்தினால்
குற்றம் நீங்கி விட குணம் மாறிற்றா?
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால்?

பரலோக சிந்தை அணிந்தீர்களா
வல்ல மீட்பர் தயாளத்தினால்
மறு ஜென்ம குணமடைந்தீர்களா
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால்?

மாசு கறை நீங்கும், நீசப்பாவியே!
சுத்த இரத்தத்தின் சக்தியினால்
முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியே !
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால்?