Potri Thuthipom En Deva Devanai

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் – (2)

இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே – என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)

  1. கோர பயங்கரமான புயலில்
    கொடிய அலையின் மத்தியில் – (2)
    காக்கும் கரங் கொண்டு மார்பில் சேரத்தணைத்து
    அன்பை என்றும் பாடுவேன் (..இயேசு என்னும் நாமமே)
  1. யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
    சோர்ந்தமிழ்ந்து மாளாதே
    ஆர்ப்பின் ஜெய தொனியோடே
    பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் (..இயேசு என்னும் நாமமே)
  1. தாய் தன் பாலகனையே மறப்பினும்
    நான் மறவேன் என்று சொன்னதால் – (2)
    தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
    ஜீவ பாதை என்றும் ஓடுவேன் (..இயேசு என்னும் நாமமே)
  1. பூமியகிலமும் சாட்சியாகவே
    போங்களென்ற கட்டளையதால்
    ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
    என்றும் தொண்டு செய்குவேன் (..இயேசு என்னும் நாமமே)