Fr. S.J Berkmans
ஏசா : 54 : 10 1 தெச 5: 24 உண் 1: 16 உண் 2 : 1 புல 3: 22 ,23 ஏசா : 6 : 8
சாரோனின் ரோஜா இவர்
பரிபூரண அழகுள்ளவர்
அன்புத் தோழனென்பேன்
ஆற்றும் துணைவன் என்பேன்
இன்ப நேசரை நான் கண்டேன்
காடானாலும் மேடானாலும்
கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன்
- சீயோன் வாசியே தளராதே
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
அன்பின் தேவன் மறக்கமாட்டார்
ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் - மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மாறா தேவனின் புதுகிருபை
காலை தோறும் நமக்கு உண்டு - நேசரை அறியா தேசமுண்டு
பாசமாய் செல்ல யார்தானுண்டு
தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்

