சீர் இயேசு நாதனுக்கு
Lyrics: Clement Vedanayagam
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம் (2)
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
சரணம் :
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு (2)
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு (2)
(..சீர் இயேசு நாதனுக்கு)
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு (2)
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு (2)
(..சீர் இயேசு நாதனுக்கு)
பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு(2)
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு (2)
(..சீர் இயேசு நாதனுக்கு)