Siluvayil thongum – சிலுவையில் தொங்கும் இயேசுவைப்

Fr.S.J.Berkmans

சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார்

  1. முள்முடி தலையில் பாருங்களேன்
    முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
    கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2
    கருணை தேவன் உனக்காக
  2. கைகால் ஆணிகள் காயங்களே
    கதறுகிறார் தாங்க முடியாமல்
    இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் -2
    என்றே அழுது புலம்புகின்றார்