Thuthi Sei Maname Nitham Thuthi Sei

துதிசெய் மனமே நிதம் துதிசெய்

Original Song writer : Rev. K. Jebamani Yesudass

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

சரணங்கள்

  • உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
    வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே
  • ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
    ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே
  • சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
    சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை
  • சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
    சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே