Ummai Potri Paduvom உம்மை போற்றி பாடுவேன்

உம்மை போற்றி பாடுவேன்
எங்கள் உயர்ந்த கன்மலையே

1. பெரும் வெள்ளம் மதிலை மோதி
பெரும் காற்றும் அடிக்கையில்
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெருங் கன்மலையின் நிழலே

2. எம்மை உயர்ந்த ஸ்தானங்களில்
வைத்து வைத்தவர் நீரல்லவோ
கன்மலைத் தேனும் வடியும் எண்ணெயும்

தருபவர் நீர் அல்லவோ

3. செங்கடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும்
எங்கள் பராக்கிரமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே