Unga kirubai thaan ennai – உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது

Pastor K. S. Wilson

உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது

கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது

சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்
என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது

ஓன்றுமில்லா நேரத்தில் எல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது

ஊழியத்தின் பாதையில் எல்லாம்
என்னை உயர்த்தி வைத்த கிருபை இது