உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
- உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
குருசில் கண்டேன் – (3) என் இயேசுவை - பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே
குருசில் கண்டேன் -(3) என் இயேசுவை - மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
சோர்ந்திடாதே நம்பியேவா
நிச்சயம் இயேசு ஏற்றுக்கொள்வார் - இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்
அழைக்கிறார் (3) அன்புடனே - இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
அல்லேலூயா- (3) -ஆமென்