உயரமும் உன்னதமுமான
Pr.Wesley Maxwell
உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2
- ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2 - ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2)
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2 - எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்த்திடுவேன் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2