Vaasalanndai nindru aasaiyaayai thattum(வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்)

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோ

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று உன்னை அழைக்கிறாரே

ஆதரிப்பார் யாருமில்லை யென்றெண்ணி
ஆதரை மீதினில் அலைந்திடுவாயோ
காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்
கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை

அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணி
தற்பரன் தயவை தள்ளிடலாமோ ?
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை

மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில்
மகிபரின் இராஜ்ஜியம் காணக் கூடுமோ
பிறந்தாலோ ஜலத்தாலும் ஆவியாலும் மெய்யாய்
பிரவேசிப்பாய் தேவ இராஜ்ஜியத்தில் — வாசலண்டை

வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு
இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே
இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ? — வாசலண்டை