Vedhamae endhan velichamae (வேதமே எந்தன் வெளிச்சமே)

வேதமே எந்தன் வெளிச்சமே
வழிகாட்டியும் அதுவே
இரவும் பகலும் தியானிப்பேன்
இடறிடேன் என்றென்றுமே – 2

  1. வாலிபன் எதினால் தன் வழியை
    நிதமும் சுத்தம் செய்வான் – 2
    வசனத்தின்படி தன்னை காப்பதினால்
    பதறிடான் என்றென்றுமே – 2
  2. கர்த்தருடைய நியாயங்கள்
    செம்மையும் தூய்மையுமே – 2
    பேதையை ஞானி ஆக்கிடுமே
    ஆன்மாவை உயிர்ப்பிக்குமே – 2
  3. பிழைப்பது தேவ வார்த்தையினால்
    மாத்திரம் என்றறிவேன் – 2
    குழந்தையை போல வாஞ்சிப்பேனே
    அமருவேன் பாதத்தண்டை – 2