Vivarikka mudiyaa, poorana azhagai |விவரிக்க முடியா

Writers : Andrew Frank, Isaac D & Miracline Betty Isaac

விவரிக்க முடியா, பூரண அழகை
வர்ணிக்க வார்த்தை இல்லை
ஆராய்ந்து முடியா,அளவில்லா அன்பை
புகழ்ந்தாலும் போதவில்லை

அழகில் மிகவும் சிறந்தவரே
பழுதே இல்லா பூரணரே
உங்க அன்பிற்குள் தொலைந்து போறேன்
உங்க நினைப்பால உயிர் வாழ்கிறேன்
பூரண அழகே…

  1. அன்பென்னும் கயிறினால் இழுத்து கொண்டீர்
    உம் அழகால் என் அவமானங்கள் மாற்றினீர்
    தீராத தயவினால் தழுவிக்கொண்டு
    என் வாழ்க்கையின் ஆதரமாய் மாறினீர்
    என் அருகில் நீர் நெருங்க ,உம் ரூபம் நான் பார்த்து
    என் சாயலும் அழகானதே, என்னை உமதாக மாற்றினீரே

அன்பே என் இயேசுவே
அழகே என் இயேசுவே
அழகில் நான் மூழ்கி போகிறேன் போகிறேன்