இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்
- என்ன மதுரமவர்- நன்னய நாமச்சுவை
என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே -( 2) - பஞ்சம் பசியுடனே – மிஞ்சும் துயர் வந்தாலும்
அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில் -( 2 ) - லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும்
சோகம் அடைவேனோ நான் – ஏகன் எனக்கிருக்க – ( 2 ) - என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும்
முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார் – ( 2) - வியாதியால் எந்தனது – காயம் கெட்டுப் போயினும்
மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார் – ( 2)

