Yesu nesikkiraar – இயேசு நேசிக்கிறார்

இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க
யான் செய்ததென்ன மா தவமோ!

  1. நீசனாமெனைத்தான்
    இயேசு நேசிக்கிறார்
    மாசில்லாத பரன் சுதன்தன் முழு
    மனதால் நேசிக்கிறார்
  2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
    நரராமீனரை நேசிக்கிறாரென
    நவிலல் ஆச்சரியம்
  3. நாதனை மறந்து
    நாட்கழித்துலைந்தும்
    நீதன் இயேசெனை
    நேசிக்கிறாரெனல்
    நித்தம் ஆச்சரியம்
  4. ஆசை இயேசுவென்னை
    அன்பாய் நேசிக்கிறார்
    அதை நினைந்தவர்
    அன்பின் கரத்துளே
    ஆவலாய்ப் பறப்பேன்
  5. ராசன் இயேசுவின் மேல்
    இன்ப கீதஞ் சொலில்,
    ஈசன் இயேசெனைத்
    தானேசித்தாரென்ற
    இணையில் கீதஞ் சொல்வேன்

Yesu nesikkirar yesu nesikkirar Lyrics in English

Yesu naesikkiraar – Yesu naesikkiraar
Yesu ennaiyum naesikka
Yaan seythathenna maathavamo!

1.Neesanaamenaiththaan
Yesu naesikkiraar
Maasillaatha paran suthan muzu
Manathaal naesikkiraar — Yesu

2.Parama thanthai thantha parisuththa vaetham
Nararaameenarai naesikkiraarena
Navilal aachchariyam — Yesu

3.Naathanai maranthu naatkalith thulainthum,
Neethan yaesenai naesikkiraarenal
Niththam aachchariyam — Yesu

4.Aasai Yesuvennai
Anbaai naesikkiraar
Athai ninainthavar
Anpin karaththule
Aavalaayp parappaen — Yesu

5.Raasan Yesuvin mael
Inpa geethanj solil
Eesan iyaesenaith
Thaanesiththaarenta
Innaiyil geethanj solvaen — Yesu