Fr.S.J Berkmans
மத் 28 : 6 , அப் : 2 : 24 ,யோவான் 20: 1,16 , லூக் 24: 13 -43 வெளி 1: 8,18 ரோம 10 : 9
மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா
மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா
அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
- மரணம் அவரைத் தடுத்து நிறுத்த
முடியவில்லையே
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு - கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம் - எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார் - அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவேன்
நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம்

