லூக் 2: 14 ஏசா 50: 5 சங் 9: 18 சங் 9: 18 சங் 9: 10 எபி 2: 18
Fr.S.J Berkmans
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க
- உன்னத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – இந்தப் - செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம்
புவிதனில் உம் விருப்பம்
பூரணமாகட்டும் – இந்தப் - எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் - தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும்
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று - குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே
கறைபோக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – பாவக்

