வெளி 17: 14 வெளி 4: 11 கொலோ 1: 20 சங் 13: 6 லூக் 6: 27.28 எபே 3: 20
Fr.S.J Berkmans
தேவாதி தேவன் இராஜாதி ராஜன்
வாழ்க வாழ்கவே
கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை உமக்குத்தான்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்
- திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே - எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன் - சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே - வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்த
அணைத்து மகிழ்பவரே

