ஏசா 58: 11 எரே 17: 8 எசே 47: 9 ஏசா 60: 3 ஏசா 58: 11
Fr.S.J Berkmans
வற்றாத நீருற்று போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்
- வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய்
எப்போதும் கனி கொடுப்பாய்
தப்பாமல் கனி கொடுப்பாய் - ஓடும் நதி நீ பாயும் இடத்தில்
உயிரெல்லாம் பிழைத்திடுமே
சுகமாக வாழ்ந்திடுமே - பலநாட்டு மக்கள்
உன் நிழல் கண்டு
ஓடி வருவார்கள்
பாடி மகிழ்வார்கள் - பஞ்ச காலத்தில்
உன் ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார்
தினமும் நடத்திடுவார் - கோடை காலத்தில்
வறட்சி காலத்தில்
அச்சமின்றி இருப்பாய் – நீ
ஆறுதலாய் இருப்பாய்

