எபி 11: 25,26 2 கொரி 4: 17 மத் 5: 44 சங் 16: 8 எரே 17: 7,8
Fr.S.J Berkmans
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன்
எதற்கும் பயமில்லையே
இனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4)
- இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
இனிவரும் பலன்மேல் நோக்கமானேன்
அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
அரவணைக்கும் இயேசு போதும்போதுமே - அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கின்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம் - பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் - கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்
கடும் புயல் வந்தாலும் அசைவதில்லை
எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்
இனியும் சோர்ந்து போவதே இல்லை - ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே

