சங் 150 : 6 சங் 150: 5 ஆதி 16: 13 ரோமன் 4: 21 அப் 2: 33 யோவா 6: 68 ஏசா 9: 6
Fr.S.J Berkmans
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்
- காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா - வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காக – ஐயா - ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம் தான் உண்டு – ஐயா - அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே

