Ummai Nambi – உம்மை நம்பி உந்தன் பாதம்

சங் 9: 10 வெளி 21: 4 ரோமன் 8: 15 2 கொரி 1: 22 ,லூக் 7 : 2 2

Fr.S.J Berkmans

உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2

  1. கண்ணீரைத் துடைத்து
    கரங்களைப் பிடித்து
    காலமெல்லம் காத்துக் கொண்டீர்
  2. மகனாக மகளாக
    அப்பா என்றழைக்கும்
    உரிமையை எனக்குத் தந்தீர்
  3. அச்சாரமாய் முத்திரையாய்
    அபிஷேக வல்லமையை
    அடிமைக்குத் தந்தீரே
  4. குருடர்கள் பார்த்தார்கள்
    செவிடர்கள் கேட்டார்கள்
    முடவர்கள் நடந்தார்கள்