Yesuve En Deivame – இயேசுவே என் தெய்வமே

மத் 26: 75 மத் 27: 29 லூக் 15: 23

Fr.S.J Berkmans


இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும்

  1. நான் பாவம் செய்தேன்
    உம்மை நோகச் செய்தேன்
    உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
    என்னை மன்னியும் தெய்வமே – 2
  2. உம்மை மறுதலித்தேன்
    பின் வாங்கிப் போனேன்
    உம் வல்லமை இழந்தேனையா
    என்னை மன்னியும் தெய்வமே – 2
  3. முள்முடி தாங்கி
    ஐயா காயப்பட்டீர்
    நீர் எனக்காக பலியானீர்
    உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2
  4. துன்ப வேளையிலே
    மனம் துவண்டு போனேன்
    உம்மை நினையாது தூரப் போனேன்
    என்னை மன்னியும் தெய்வமே இந்த
    ஒரு விசை மன்னியுமே -2
  5. அநியாயம் செய்தேன்
    கடும்கோபம் கொண்டேன்
    பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா
    என்னை மன்னியும் தெய்வமே – 2