கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
சரணம் :
1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவியப் பாதையிலே – இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே – (கிருபையிதே…)
2. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை – (கிருபையிதே…)
3.அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர – அனுகிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் – (கிருபையிதே…)
4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் பற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் – (கிருபையிதே…)
5. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்த்தனரே, பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய – (கிருபையிதே…)
6.ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் – (கிருபையிதே…)

