Ummai nokki parkindren – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

Fr.S.J Berkmans

ஏசா : 25:4 ஏசா : 25:1 ஏசா : 66 : 13

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்

இயேசையா ஸ்தோத்திரம் – (4)

சரணங்கள்

  1. உலகம் வெறுக்கையில்
    நீரோ அணைக்கிறீர்
    உமது அணைப்பிலே அந்த
    வெறுப்பை மறக்கின்றேன்
  2. கண்ணின் மணிபோல
    என்னைக் காக்கின்றீர்
    உமது சமூகமே
    தினம் எனக்குத் தீபமே
  3. நீரே என் செல்வம்
    ஒப்பற்ற என் செல்வம்
    உம்மில் மகிழ்கின்றேன் – நான்
    என்னை மறக்கின்றேன்