En pavangal en Yesu – என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்

Fr.Berkmans

மீகா 7: 19 2 கொரி 5: 17


என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்

  1. இனி நான் பாவியல்ல
    பரிசுத்தமாகிவிட்டேன்
    நேசரின் பின் செல்வேன் – நான்
    திரும்பி பார்க்க மாட்டேன் – என்
  2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
    காலாலே மிதித்து விட்டார்
    நினைவுகூர மாட்டார் – இனி
    நேசரைத் துதிக்கின்றேன் – இனி
  3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
    மறுபடி பிறந்துவிட்டேன்
    பழையன கழிந்தனவே – நான்
    புதிய படைப்பானேன்