மத் 10: 7,8 யோவான் 14: 16 சங் 68: 18 கலா 5: 20 ,23
Fr.S.J Berkmans
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்
- பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே - தேற்றரவாளர் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே - வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே - கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கம்
பரமனே வாருமே

