யோவா 11: 28 சங் 142: 4,5 ஏசா 53: 4
Fr.S.J Berkmans
போதகர் வந்துவிட்டார்
உன்னைத் தான் அழைக்கிறார்
எழுந்து வா – (4)
- கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே - பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவமைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகனே - கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்க சுமந்து கொண்டார் - துன்பம் துயரம் உன்னை
சோர்வுக்குள் ஆக்கியதோ
அன்பர் இயேசு அழைக்கிறார்
அணைக்கத் துடிக்கிறார்

