Priyamanavale un athuma | பிரியமானவனே உன்

3 யோவான் 2 எபே 6: 17 சங் 18: 29,33 ஏசா 40: 4 எபி 12:1

Fr.S.J Berkmans


பிரியமானவனே (பிரியமானவளே) – உன்
ஆத்துமா வாழ்வது போல் – நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே ( மகளே )

வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்து போராடி வெற்றி பெறு

பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே ( மகளே )
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே ( மகளே )