நாகூம் 1: 15 2 நாளா 5: 13,14 ஏசா 33: 20,24 சங் 81: 3,4 1 கொரி 5: 7,8 யோவான் 19: 30 எபி 3: 14
Fr.S.J.Berchmans
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெகோவா தேவனைக் கொண்டாடுவோம்
- பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்
பாடிக் கொண்டாடுவோம்
தீயவன் நடுவில் வருவதில்லை
கர்த்தர் ஜெயம் எடுத்தார்-நம்
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம்
- நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர் என்று
நாம் உயர்த்திடுவோம்
கர்த்தரின் மகிமை மேகம் போல
இறங்கட்டும் இந்நாளிலே - அசைக்க முடியா கூடாரமாவோம்
அமைதியின் இல்லமாவோம்
நோயாளி என்று சொல்வதில்லை
குற்றங்கள் நீங்கியதே - இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த
பிரமாணம் இதுதானே
எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது
கட்டளையாய் கொடுத்தார் - பழைய புளித்த மாவை அகற்றி
தூக்கி எறிந்திடுவோம்
அசுத்தம் அகற்றிடுவோம்
துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம்
6.எல்லாம் முடிந்தது என்று இரட்சகர்
முழங்கினார் சிலுவையிலே
சாவுக்கு அதிபதி சாத்தானை
சாவாலே வென்றுவிட்டார்
