Aaruthalin Deivame | ஆறுதலின் தெய்வமே

சங் 84: 1 சங் 84: 4 சங் 84: 5 சங் 84: 6, 7 சங் 84: 10 சங் 84: 2

Fr.S.J Berkmans


ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது

  1. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
    உண்மையிலே பாக்கியவான்கள்
    தூய மனதுடன் துதிப்பார்கள்
    துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்
  2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
    உண்மையிலே பாக்கியவான்கள்
    ஓடினாலும் களைப்படையார்
    நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்
  3. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
    களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
    வல்லமை மேலே வல்லமை கொண்டு
    சீயோனைக் காண்பார்கள் – ஆமென்
  4. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
    உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
    ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
    வாசலில் காத்திருப்பேன் – ஆமென்
  5. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
    ஆர்வமுடன் கதறுகின்றது
    உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
    கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்