Fr.S.J. Berkmans
சங் : 15 : 1, 2 1 தெச 4: 3 வெளி 7: 9 -13
பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்
- கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று
நிற்கக் கூடியவன் யார் ?
மாசற்ற செயல் தூய உள்ளம்
உடைய மனிதனே - நாமெல்லாம் பரிசுத்தராவதே
தெய்வத்தின் திருசித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
தரிசிக்க முடியாது - பரிசுத்தரென்று ஓய்வின்றிப் பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
எந்நாளும் பாடுவேன்

