Fr.S.J Berkmans
1 யோவான் 4 : 8, 9 லூக் : 24 :32 கலா 2:20
அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன் – 2
பாதை இழந்த ஆடாய்
பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே
திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல
இயேசு வாழ்கின்றார்- என்னில்
இயேசு பேசும்போது -என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும்போது – என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன்
வெல்வேன் அலகையை – தினம்
கண்ணீர் சிந்தும்போது -மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருக்கும்போது அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார்- எனக்கு

