Yesu raja ezhai – இயேசு ராஜா ஏழை

Fr. S.J Berkmans

உன் 2: 1 சங் 40: 2 சங் 40: 12 சங் 46 : 1 உன் 4 : 10


இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே

  1. என் நேசர் நீர்தானையா
    என்னை தேற்றிடும் என் தேசையா
    சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
    சீக்கிரம் வாருமையா – ஐயா
  2. உளையான சேற்றினின்று என்னை
    உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
    அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
    அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா
  3. ஆபத்து காலத்திலே நல்ல
    அநுக்கிரகம் துணையும் நீரே
    அன்பே என்றீர் மகளே என்றீர்
    மணவாட்டி நீதான் என்றீர்
  4. பரிசுத்த ஆவியினால் என்னை
    அபிஷேகம் செய்தீர்
    பயங்களை நீக்கி பலத்தையே தந்து
    பரிசுத்த மகளாக்கினீர்