Vathai unthan koodarathai – வாதை உந்தன கூடாரத்தை

Fr.S.J Berkmans


வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

  1. உன்னதமான கர்த்தரையே
    உறைவிடமாக்கிக் கொண்டாய்
    அடைக்கலமாம் ஆண்டவனை ஆ
    தாயமாக்கிக் கொண்டாய்
  2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
    சாத்தானை ஜெயித்து விட்டோம்
    ஆவி உண்டு வசனம் உண்டு
    அன்றாடம் வெற்றி உண்டு – நமக்கு
  3. கர்த்தருக்குள் நம் பாடுகள்
    ஒரு நாளும் வீணாகாது
    அசையாமல் உறுதியுடன்
    அதிகமாய் செயல்படுவோம்
  4. நம்முடைய குடியிருப்பு
    பரலோகத்தில் உண்டு
    வரப்போகும் இரட்சகரை
    எதிர்நோக்கி காத்திருப்போம்

5 . அழைத்தவரோ உண்மையுள்ளவர்
பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
குற்றமின்றி காத்திடுவார்

  1. அற்பமான ஆரம்பத்தை
    அசட்டை பண்ணாதே
    தொடங்கினவர் முடித்திடுவார்
    சொன்னதை செய்திடுவார்
  2. ஆற்றல் அல்ல சக்தி அல்ல
    ஆவியினால் ஆகும்
    சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
    துணையாளர் முன் செல்கிறார்