Anbe kalvari Anbe | அன்பே கல்வாரி அன்பே

யோவான் 19: 28 ,34 யோவான் 20: 25 ரோமன் 12: 2

Fr.S.J Berkmans

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதppa

  1. தாகம் தாகம் என்றீர்
    எனக்காய் ஏங்கி நின்றீர்
    பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
    பரிகார பலியானீர்– எங்கள்
  2. காயங்கள் பார்க்கின்றேன்
    கண்ணீர் வடிக்கின்றேன்
    தூய திரு இரத்தமே
    துடிக்கும் தாயுள்ளமே
  3. அணைக்கும் கரங்களிலே
    ஆணிகளா சுவாமி ?
    நினைத்து பார்க்கையிலே (என் )
    நெஞ்சம் உருகுதையா
  4. நெஞ்சிலே ஓர் ஊற்று
    நதியாய் பாயுதையா
    மனிதர்கள் மூழ்கணுமே
    மறுரூபம் ஆகணுமே – எல்லா