Yesuvale Pidikkappattavan | இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்

பிலி 3: 7,8,13,14,20 கொலோ 3: 4 சங் 45: 7

Fr.S.J Berkmans


இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – அவர்
அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன் – நான்
எனக்கென்று எதுவுமில்லை
இப்பூமி சொந்தமில்ல

எல்லாமே இயேசு…என் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு

  1. பரலோகம் தாய்வீடு
    அதைத் தேடி நீ ஓடு
    ஒருவரும் அழிந்து போகாமலே
    தாயகம் வர வேண்டும் தப்பாமலே – நம்ம
  2. அந்தகார இருளினின்று
    ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
    அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
    அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த
  3. இலாபமான அனைத்தையுமே
    நஷ்டமென்று கருதுகின்றேன்
    இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
    எல்லாமே இழந்து விட்டேன் நான்
  4. பாடுகள் அநுபவிப்பேன்
    பரலோக தேவனுக்காய்
    கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
    களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்
  5. பின்னானவை மறந்தேன்
    முன்னானவை நாடினேன்
    என் நேசர் தருகின்ற பரிசுக்காக
    இலக்கை நோக்கித் தொடருகின்றேன்
  6. நீதியை விரும்புகிறேன்
    அக்கிரமம் வெறுக்கிறேன்
    ஆனந்த தைல அபிஷேகத்தால்
    அனுதினம் நிரம்புகிறேன்