Unnathamanavarin-உன்னதமானவரின் உயர்

உன்னதமானவரின் உயர்
மறைவில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே (2)

அவர் செட்டையின் கீழ்
அடைக்கலம் புகவே – தம்
சிறகுகளால் மூடுவார் (2)

  1. தேவன் என் அடைக்கலமே
    என் கோட்டையும் அரணுமவர்
    அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
    என் நம்பிக்கையும் அவரே (2) – அவர் செட்டையின்
  2. இரவின் பயங்கரத்திற்கும்
    பகலில் பறக்கும் அம்புக்கும்
    இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
    நான் பயப்படவே மாட்டேன் (2) – அவர் செட்டையின்
  3. ஆயிரம் பதினாயிரம்
    பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
    அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
    உன் தேவன் உன் தாபரமே (2) – அவர் செட்டையின்
  4. தேவன் உன் அடைக்கலமே
    ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
    ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
    அணுகாமலே காத்திடுவார் (2) – அவர் செட்டையின்
  5. உன் வழிகளிலெல்லாம் உன்னை
    தூதர்கள் காத்திடுவார்
    உன் பாதம் கல்லில் இடறாதபடி
    தம் கரங்களில் ஏந்திடுவார் (2) – அவர் செட்டையின்
  6. சிங்கத்தின் மேல் நடந்து
    வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
    அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
    உன்னை விடுவித்துக் காத்திடுவார் (2)- அவர் செட்டையின்
  7. ஆபத்திலும் அவரை நான்
    நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
    என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
    என் ஆத்தும நேசரவர் (2) – அவர் செட்டையின்