Yesu nam pinigalai-இயேசு நம் பிணிகளை

Fr.S.J Berkmans

ஏசா : 53 : 4 , ஏசா : 53-5 ஏசா : 53-7 யோவான் 1 : 12

இயேசு நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்
நம் நோய்களைச் சுமந்து கொண்டார்

  1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்
    அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்
    நம்மை நலமாக்கும் தண்டனை
    அவர் மேல் விழுந்தது
    அவருடைய காயங்களால்
    குணமடைந்தோம் – நாம்
  2. கொல்வதற்காய் இழுக்கப்படும்
    ஆட்டுக்குட்டியைப் போல – மயிர்
    கத்திரிப்பேன் முன்னிலையில்
    கத்தாத செம்மறி போல
    வாய்கூட அவர் திறக்கவில்லை
    தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்
  3. நம் பாவம் அனைத்தும் அகற்றிவிட்டார்
    இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்
    கழுமரத்தின் மீது தம் உடலில்
    நம் பாவங்கள் அவர் சுமந்தார்