Ummai pirinthu – உம்மைப் பிரிந்து

யோவான் 15: 5 ,8 சங் 139 : 1-5-7 சங் 139 : 1-2-3

Fr.S.J Berkmans


உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா – (2)

  1. திராட்சை செடியின் கொடியாக
    உம்மில் நிலைத்திருப்பேன்
    மிகுந்த கனி கொடுப்பேன்
    உம் சீடானாயிருப்பேன் – நான்
  2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
    உம் கரம் வைக்கின்றீர்
    உமக்கு மறைவாய் எங்கே போவேன்
    உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
  3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
    பயந்து போக மாட்டேன்
    துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
    சோர்ந்து போகமாட்டேன் – நான்
  4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
    என்னை சூழ்ந்து உள்ளீர்
    என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
    எல்லாம் உம் கிருபை – ஐயா