Udavi varum – உதவி வரும் கன்மலை

Fr.S.J Berkmans

சங் 121: 1, 2 சங் 121: 3, 4 சங் 121: 5 ,6 சங் 121: 7 சங் 121: 8


உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2)

  1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
    காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2)
    இஸ்ரவேலை காக்கிறவர்
    என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி
  2. கர்த்தர் என்னை காக்கின்றார்
    எனது நிழலாய் இருகின்றார் (2)
    பகலினிலும் இரவினிலும்
    பாது காக்கின்றார் (2) – உதவி
  3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
    விலக்கி என்னைக் காத்திடுவார் (2)
    அவர் எனது ஆத்துமாவை
    அனுதினம் காத்திடுவார் (2) – உதவி
  4. போகும் போதும் காக்கின்றார்
    திரும்பும் போதும் காக்கின்றார் (2)
    இப்போது எப்போது
    என்னாளும் காக்கின்றார் (2) – உதவி