லூக் 7: 38 சங் 1 : 12 ஏசா 40: 31 யாத்ரா 15: 23-25 லூக் 10: 42 பிலி 4: 6
Fr.S.J Berkmans
இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே – (2)
பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்
இரவும் பகலும் வேத வசனம்
தியானம் செய்திடுவேன் – நான்
காத்திருந்து பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்
கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு
எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்

