Nambikkaiyinaal Nee | நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

ரோமன் 1: 17 யோவான் 19: 28 1 பேதுரு 2: 24 மாற் 5: 27-29 எபி 11: 11 ரோமன் 4: 21 1 யோவான் 4: 4 எபி 11: 29,30 1 யோவான் 4: 4 2 நாளா 32: 8 மத் 17: 20

Father S.J. Berchmans


நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார்

  • அதிசயக் கல்வாரி சிலுவையிலே
    அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்
    தழும்புகளால் நீ சுகமானாய்
    தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய்
  • ஆடையை தொட்டால் நலம்பெறுவேனே
    அறிக்கை செய்து சுகமடைந்தாள்
    ஒருத்துளி சந்தேகமில்லாமலே
    ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்
  • ஆபிரகாம் சாராள் குழந்தைப்பெற
    ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்
    வாக்குதத்தம் செய்தவர் நம்பதக்கவர்
    ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்
  • கட்டாந்தரையிலே நடப்பது போல்
    கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்
    எரிகோ மதில்கள் விழுந்தனவே
    ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்
  • உலகிலே இருக்கும் அவனை விட
    உனக்குள் இருப்பவர் பெரியவரே
    துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
    துரிதமாய் வெற்றி காணச் செய்வார்
  • மலையைப் பார்த்து கடலில் விழு
    என்று சொன்னால் நடந்திடுமே
    உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
    நம்பினால் எல்லாம் நடந்திடுமே
  • நம்பிக்கையினால் நாம் வாழ்வு பெறுவோம்
    நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம்
    பயம் இல்லையே திகில் இல்லையே
    படைத்தவர் நம்மை நடத்திச்செல்வார்

Nambikkaiyinaal Nee Lyrics in English

Nampikkaiyinaal nee vaazvu peruvaai
Nannbanae nee payappadaathae
Payam vaenndaam thihil vaenndaam
Padaiththavar unnai nadaththichchelvaar

1.Athisayak kalvaari siluvaiyilae
Anaiththaiyum seythu mutiththuvittar
Thalumpukalaal nee sukamaanaay
Thayavinaal maraுpati piranthuvittay

2.Aadaiyai thottal nalamperuvaen
Arikkai seythu sugamadainthaal
Oru thuli santhaegamillaamalae
Odivaa Yesu indru sugam tharuvaar

3.Abraham saaraal kuzanthaippera
Aatral pettrathu nampikkaiyinaal
Vaakku thaththam seythavar nampathakkavar
Yekkamellaam eppadiyum niraivaettruvaar

4.Kattantharaiyilae nadappathu pol
Kadalaik kadanthanar nampikkaiyinaal
Eriko mathilkal vizunthanavae
Yaezunaal oorvalam vanthathinaal

5.Ulahilae irukkum avanai vida
Unakkul iruppavar periyavarae
Thunai nindru unakkaay yuththam seyvaar
Thurithamaai vetri kaanach seyvaar

6.Malaiyaip paarththu kadalil vizu
Endru sonnaal nadanthidumae
Unnaalae koodaathathu ondrumillaiyae
Nampinaal ellaam nadanthidumae

Nampikkaiyinaal naam vaalvu peruvoam
Nalamudan vaaznthu jeyam edupoam
Payam illaiyae thihil illiayae
Padaiththavar nammai nadaththichchelvaar