Ummai naadi thaedum manithar | உம்மை நாடித் தேடும் மனிதர்

சங் 5: 11 சங் 139: 24 மத் 4:4 சங் 119:93

Father.S.J. Berchmans


உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்

மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே
துதியும் , கனமும், தூயோனே உமக்கே

  1. என் பார்வை சிந்தை எல்லாம்
    நீர் காட்டும் பாதையில் தான்
    என்சொல்லும் செயலும் எல்லாம்
    உம் சித்தம் செய்வதில் தான்
  2. உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
    என்னைத் திருத்த வேண்டும் தேவா
    கருத்தோடு உமது வசனம்
    கற்றுத் தந்து நடத்த வேண்டும்
  3. உந்தன் வேதம் எனது உணவு
    நன்றி கீதம் இரவின் கனவு
    உந்தன் பாதம் போதும் எனக்கு
    அதுதானே அணையா விளக்கு
  4. ஒரு நாளும் உம்மை மறவேன்
    ஒரு போதும் உம்மை பிரியேன்
    மறுவாழ்வு தந்த நேசர்
    மணவாளன் மடியில் சாய்ந்தேன்

Ummai Naadi Theyedum Manithar Lyrics in English

Ummai naatith thaedum manithar
Ummil makiznthu kalikoorattum
Unthan meetpil naattam kolvor
Mana amaithi indru perattum

Makimai maatchimai, maavaenthan umakkae
Thuthiyum , kanamum, thooyonae umakkae

1.En paarvai sinthai ellaam
Neer kaattum paathaiyil thaan
Ensollum seyalum ellaam
Um siththam seyvathil thaan

2.Ummai varuththum vaziyil nadanthaal
Ennaith thiruththa vaenndum thaevaa
Karuththodu umathu vasanam
Kattruth thanthu nadaththa vaenndum

3.Unthan vaetham enathu unavu
Nanri geetham iravin kanavu
Unthan paatham pothum enakku
Athuthaanae annaiyaa vilakku

4.Oru naalum ummai maravaen
Oru pothum ummai piriyaen
Maru vaazvu thantha naesar
Manavaalan madiyil saainthaen