தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும்
1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே (தூயாதி தூயவரே)
2. நோய்களை அகற்றிடும் வைத்தியரே
தெய்வீக நல்சுகம் ஈந்திடுமே (தூயாதி தூயவரே)
3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே (தூயாதி தூயவரே)
4. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வந்திடுவீரே (தூயாதி தூயவரே)
5. பாவத்தின் சேற்றினில் அமிழ்ந்திடாமல்
பாசமாய் அணைத்தென்னை தூக்கினீரே ((தூயாதி தூயவரே)