என் மீட்பர் ரத்தம் சிந்தினார்
Freddy Joseph
என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன்,
இயேசுவின் நாமம் நம்புவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.
- கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன்,
மாறாதவர் என்றறிவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான். - மரண வெள்ளம் பொங்கினும்,
என் மாம்சம் சோர்ந்து போயினும்,
உன் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான். - நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.