Uyaramum Unnathamum

உயரமும் உன்னதமுமான

உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

  1. ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர்
    சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)
    அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
    இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) – சேனைகளின் கர்த்தர்
  2. ஆதியும் அந்தமுமானவர் இவர்
    அல்பாவும் ஒமேகாவுமானவர் இவர் (2)
    இருந்தவரும் இருப்பவரும்
    சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2) – சேனைகளின் கர்த்தர்
  3. எல்லா நாமத்திலும் மேலானவர்
    முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)
    துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
    தூயவர் இயேசுவை உயர்த்திடுவேன் (2) – சேனைகளின் கர்த்தர்